Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தற்போது நீர் வெட்டு இல்லை; சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

தற்போது நீர் வெட்டு இல்லை; சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டில் தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் நிலவினாலும், இதுவரை எந்தப் பகுதியிலும் குடிநீர் விநியோகத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

சபையின் தலைவர் சந்தன பண்டார கூறுகையில், குடிநீர் உற்பத்திக்கான பிரதான நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை இதுவரை நீர் பயன்பாட்டில் எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காததால், அதிகபட்ச உற்பத்தித் திறனிலேயே நீர் விநியோகம் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்காலத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீர் பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தும் நிலை ஏற்பட்டால், அப்போது நிலைமையை மதிப்பீடு செய்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கணிப்புகளின்படி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தற்போது வறட்சியான காலநிலை நிலவி வருகிறது. மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரே குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், 2027ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் வறட்சி நிலைமை மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக, நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் வசதிகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல முன்ஆயத்தப் பணிகளில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் நீரை வீணாக்காமல் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவதுடன், அதிகபட்ச சிக்கனத்துடன் நீரைப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
ஒரு பதிவால் மாறிய வாழ்க்கை; சவூதி நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர்

ஒரு பதிவால் மாறிய வாழ்க்கை; சவூதி நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு