Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!

விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கேரளக் கடற்கரைப் பகுதியில் மூழ்கிய ‘MSC Elsa 3’ கொள்கலன் கப்பலிலிருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 43க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் அடங்கிய கொள்கலன்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் முதல் காலி வரை உள்ள கடற்கரைப் பகுதிகளில் இந்தப் பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ந்து கரை ஒதுங்கி வருவதாகவும், பருவமழை காரணமாக இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகளில் சுமார் 1,800 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான அனைத்து செலவுகளையும் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனமே ஏற்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கப்பல் மூழ்கியதால் இலங்கையின் கடல்சார் சூழலியல் அமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிட்டு, அறவிடப்பட வேண்டிய நஷ்டஈட்டுத் தொகையை கணக்கிடுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைபீரியக் கொடியின் கீழ் இயங்கிய ‘MSC Elsa 3’ கப்பல், இந்தியாவின் கேரளக் கடற்கரைக்கு அப்பால் சுமார் 38 கடல் மைல் தொலைவில் நீர் கசிவுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, கடந்த மே 25ஆம் திகதி கடலில் மூழ்கியது.

விபத்து நேரத்தில் கப்பலில் 643 கொள்கலன்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?
செய்திகள்

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

September 14, 2026
Next Post
வரலாறும் பக்தியும் சங்கமிக்கும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்

வரலாறும் பக்தியும் சங்கமிக்கும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு