Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும்; இம்ரான் மஹ்ரூப்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பான விவகாரத்தில் அரசாங்கம் தெளிவானதும் உறுதியானதுமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின் ஆடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் சில அரச உத்தியோகத்தர்கள் தேவையற்ற தலையீடுகளை மேற்கொள்வதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒவ்வொரு சமூகத்தினரதும் சமய மற்றும் கலாசார உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை பாதுகாப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பு எனவும் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் உரிய சட்ட விதிமுறைகளை மீறும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் அரசாங்கம் தேவையான நடைமுறைகளை அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சில அரச உத்தியோகத்தர்களின் இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையில் மீண்டும் முரண்பாடுகளையும் பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடும் எனவும், இது அரசாங்கத்தின் ‘வளமான நாடு’ கொள்கையை கேள்விக்குள்ளாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் அடிக்கடி எழும் தேவையற்ற தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்ரான் மஹ்ரூப் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை
செய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை

September 25, 2026
கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை
செய்திகள்

கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை

September 25, 2026
கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!
செய்திகள்

கறுப்பு ஆடை அணிந்து பாராளுமன்றம் வந்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள்!

September 25, 2026
வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் அடுத்த முடிவு 30ஆம் திகதி
செய்திகள்

வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் அடுத்த முடிவு 30ஆம் திகதி

September 25, 2026
சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!
செய்திகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்

September 25, 2026
Next Post
செம்மணியில் தலையில்லா முண்டமான என்புக்கூடுகளும் மீட்பு

செம்மணியில் தலையில்லா முண்டமான என்புக்கூடுகளும் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு