யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபி வளாகத்திற்குள் இன்று காலை பொலிஸார் நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த தியாக தீபத்தின் உருவச் சிலையை அகற்றிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நினைவிட வளாகத்திற்குள் பொலிஸார் காலணிகளுடன் நுழைந்ததாகவும், அங்கிருந்த உருவச் சிலையை அனுமதியின்றி அகற்றிச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளின் இறுதி நாள் நேற்று நல்லூரில் இடம்பெற்றிருந்த நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நினைவிடத்தில் உருவச் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் முன்னதாகவும் வெளியாகியிருந்தன.
இச்சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.








