Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போர் தொடரும்; ஈரான் எச்சரிக்கை!

டிரம்பின் பதவிக்காலம் முடியும் வரை போர் தொடரும்; ஈரான் எச்சரிக்கை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரை போரினை தொடர்ந்து முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக ஈரான் புரட்சிகரக் காவல் படையின் தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகர் முகமது ரேசா நக்தி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவம் தாம் எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருப்பதை தற்போதைய மோதலின் ஊடாக அறிந்துகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிரிகள் அஞ்சும் நிலையை உருவாக்குவதே தங்களின் பிரதான இலக்கு எனத் தெரிவித்த முகமது ரேசா நக்தி, அதற்காக போரை டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரை நீடித்து அமெரிக்காவுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்துவது ஒரு வழியாகும் என கூறியுள்ளார்.

ஈரான் தொடர்ந்தும் அதிகளவான ஏவுகணைகளை உற்பத்தி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை ஏவுகணைகள் கையிருப்பு குறையும் நிலை ஏற்பட்டாலும், அமெரிக்காவுக்கு மேலும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவுக்கு ஆயிரக்கணக்கான பொருளாதார நலன்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளதாகவும், அவற்றை இலக்கு வைக்க முடியும் எனவும் முகமது ரேசா நக்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க இராணுவம் சந்தித்து வரும் இழப்புகள் மற்றும் உள்நாட்டில் குறைந்து வரும் அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட காரணங்களால் போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் முயற்சித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், டிரம்பின் பதவிக்காலம் நிறைவடையும் வரை போரை தொடர்வோம் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உண்ணாவிரதப் போராட்டம் கலவரமாக வெடிப்பு!-கஸ்ஸப தேரரின் கூடாரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன
காணொளிகள்

உண்ணாவிரதப் போராட்டம் கலவரமாக வெடிப்பு!-கஸ்ஸப தேரரின் கூடாரங்கள் அடித்து நொறுக்கப்பட்டன

November 12, 2026
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
செய்திகள்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

November 12, 2026
ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம்; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் கைது!
செய்திகள்

ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம்; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் கைது!

November 12, 2026
ஜனாதிபதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அனோஜனின் குடும்பத்தினர்!
செய்திகள்

ஜனாதிபதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அனோஜனின் குடும்பத்தினர்!

November 12, 2026
கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை; ராஜாங்கனை தேரர் தரப்பினர் மீது தாக்குதல்!
செய்திகள்

கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை; ராஜாங்கனை தேரர் தரப்பினர் மீது தாக்குதல்!

November 12, 2026
2026ஆம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 2,381 பேர் உயிரிழப்பு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

2026ஆம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 2,381 பேர் உயிரிழப்பு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

November 12, 2026
Next Post
சூடுபிடிக்கும் முஸ்லீம் கலாசார ஆடை விவகாரம்; சுகுணன் வைத்தியரை போட்டுத்தாக்கிய அர்ச்சுனா

சூடுபிடிக்கும் முஸ்லீம் கலாசார ஆடை விவகாரம்; சுகுணன் வைத்தியரை போட்டுத்தாக்கிய அர்ச்சுனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு