Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை

முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயாராகும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள 09 முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு ஏதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க குறித்த வைத்தியசாலை நிர்வாகம் தற்போது தயாராகியுள்ளது.

இது தொடர்பில் அறிவிக்கும் கடிதம்,நேற்று (14) வெள்ளிக்கிழமை குறித்த முஸ்லிம் பெண் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு தனித் தனியாகப் பெயரிடப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் எனக் குறிப்பிட்டு கையொழுத்திட்டுள்ள இந்தக் கடிதத்தில் பிரதிப் பணிப்பாளரின் இறப்பர் முத்திரையே பொறிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் நிர்வாகப் பணிப்பாளர் ஆகியோருக்கு இந்தக் கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

‘சுகாதார பணி உதவியாளர் சீருடை தொடர்பானது’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதி சுகாதார பணி உதவியாளராக எமது வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்தீர்கள்.

நீங்கள் கடமை பொறுப்பேற்ற அன்றைய தினத்திலேயே சுகாதார அமைச்சு மற்றும் பொது நிர்வாக அமைச்சு ஆகியவற்றினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக சீருடை அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், சுற்றுநிரூபத்தினை பின்பற்றாமல் கடமைக்கு சமூகமளிப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

நீங்கள் அனைவரும் தகுதிகாண் காலப் பகுதிக்குள் உட்பட்ட ஊழியர்கள் என்பது நினைவூட்டப்படுகின்றது.

உடன் செயற்படும் வண்ணம் சுகாதார பணி உதவியாளர்களுக்குரிய சீருடை தொடர்பான சுற்றறிக்கையின் வழிகாட்டல்களை பின்பற்றி கடமைக்கு சமூகளிக்குமாறு பணிக்கப்படுகின்றீர்கள்.

தவறும் பட்டசத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுவீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
செய்திகள்

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

September 30, 2026
பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!
செய்திகள்

பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!

September 30, 2026
டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
Next Post
கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த தமிழ் மொழிப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றவர் கைது

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவிருந்த தமிழ் மொழிப் பாடப்புத்தகங்களை எடைக்கு விற்றவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு