Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!

பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Rémi Lambert உள்ளிட்ட தூதுக்குழுவினர், நேற்று 28 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைத் தலைமையகம் மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இலங்கை கடற்படை, ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் பற்றிய அலுவலகம் (UNODC) மற்றும் ஜெனரல் சார் ஜோன் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சமுத்திர ஆய்வுகளுக்கான பிராந்திய மையம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ள, கப்பல்களில் ஏறுதல், சோதனையிடுதல், கைது செய்தல் மற்றும் மறைக்கப்பட்ட இடங்களை பரிசோதிக்கும் முறைகள் பற்றிய பயிற்சிப் பாடநெறிக்கு இணைவாக, இந்த விஜயம் அமைந்தது.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், கடற்படை பிரதி பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி கொமடோர் நலிந்த திசாநாயக்க ஆகியோரைச் சந்தித்து, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

அதனைத் தொடர்ந்து, சிறப்புப் படகுகள் படைப்பிரிவின் தலைமையகப் பயிற்சிப் பள்ளியில் இடம்பெறும் பயிற்சித் திட்டத்தைப் பார்வையிடுவதற்காகச் சென்ற தூதுக்குழுவினர், பாடநெறிக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் நடைமுறைப் பயிற்சிப் பயிற்சிகளையும் பார்வையிட்டனர்.

மேலும், சிறப்புப் படகுகள் படைப்பிரிவின் பயிற்சிகளைப் பார்வையிடுவதற்காக இலங்கையிலுள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதரகம், ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் (UNODC), சமுத்திர ஆய்வுகளுக்கான பிராந்திய மையம் மற்றும் பிரான்ஸ் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

அத்துடன், இந்நிகழ்வில் ஜெனரல் சார் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சமுத்திர ஆய்வுகளுக்கான பிராந்திய மையத்தின் பணிப்பாளர் கெப்டன் ஜானக குணவர்தன, சிறப்புப் படகுகள் படைப்பிரிவின் பயிற்சிப் பள்ளியின் கட்டளைத் தளபதி கெப்டன் தர்மசிரி ஹேரத், சிறப்புப் படகுக் படையணியின் கட்டளை அதிகாரி கொமாண்டர் லக்மால் வீரக்கொடி உட்பட கடற்படைப் படையினரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!
செய்திகள்

மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

September 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!
செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!

September 30, 2026
பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்

September 30, 2026
தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
செய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

September 30, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.