Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

தேர்தலுக்கு முன்பே எனக்கு எதிரான சேறடிப்பு பிரசாரங்கள் ஆரம்பம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தேர்தல் காலங்களில் தமக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சேறடிப்பு பிரசாரங்கள், இம்முறை தேர்தலுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அரசியல் ரீதியாகத் தம்மைப் பலவீனப்படுத்தும் நோக்கில் சில பத்திரிகைகள் அவ்வப்போது தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

குறிப்பாக, தீவகத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தமது அலுவலகத்திற்குச் சென்றதாகவும் அண்மையில் வெளியான செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அவ்வாறான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக மற்றும் கூட்டு மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை ரண்முனி ஜீட் வர்ணன் றொஹான் சில்வா என்பவர் அசாத் மௌலானா சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட விடயங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், அசாத் மௌலானா தன்னுடன் தொடர்பு இருந்ததாகத் தெரிவித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே தான் அழைக்கப்பட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்தி வெளியிட்ட சில பத்திரிகைகள், தமக்குக் களங்கம் ஏற்படுத்தி அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் வழக்கமான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு
செய்திகள்

திலினி பிரியமாலியைக் கைது செய்ய உத்தரவு

September 30, 2026
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

September 30, 2026
பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!
செய்திகள்

பிரான்ஸ் தூதுவர் தலைமையிலான குழு கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்!

September 30, 2026
டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்
காணொளிகள்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

September 30, 2026
மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!
செய்திகள்

மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

September 30, 2026
Next Post
பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

பழைய வளத்தாப்பிட்டி, வாழைச்சேனையைச் சேர்ந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு