Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பான கூட்டம்

41 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான சுனில் ஹந்துனெத்தி அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத் மற்றும் ஹபீப் லெப்பை மெஹமட் ரிபான் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

2026ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலகம், எணைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், கிழக்கு மாகாண சபை மற்றும் வெளிநாட்டு நிதியுதவிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் இதன்போது பரிசீலிக்கப்பட்டது.

மாவட்ட செயலகத்தின் கீழ் 1,031 திட்டங்களுக்கு 2,723.72 மில்லியன் ரூபாவும், எனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் கீழ் 1,079 திட்டங்களுக்கு 4,672.39 மில்லியன் ரூபாவும், கிழக்கு மாகாண சபையின் கீழ் 627 திட்டங்களுக்கு 2,706.00 மில்லியன் ரூபாவும், வெளிநாட்டு நிதியுதவியின் கீழ் 15 திட்டங்களுக்கு 901.85 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதன்படி, மொத்தம் 2,752 திட்டங்களுக்கு 11,003.96 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட விடயங்களின் முன்னேற்றம், குடிநீர் விநியோகம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அபிவிருத்தி, மட்டக்களப்பு வாவி பாதுகாப்பு, காலநிலை மாற்றம், கனிய வள அகழ்வு, காகித நகரை அபிவிருத்தி செய்தல், பாலங்கள் மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மைலத்தமாடு பிரச்சனை தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலத்திற்குள் நிறைவு செய்வதுடன், மாவட்ட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மாவட்டத்தில் இடம்பெறும் யானை–மனித மோதலின் தாக்கங்களைக் குறைப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், தேவையான பிராந்திய நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், மக்களுக்குத் தேவையான குடிநீர் விநியோகத்தை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் கே. குணநாதன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவநீதன், உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்..

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!
செய்திகள்

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

September 30, 2026
மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!
செய்திகள்

மட்டு களுதாவளை மீன் சந்தையில் சுகாதாரமற்ற 8 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு!

September 30, 2026
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!
செய்திகள்

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீதிகளை புனரமைக்க இலங்கைக்கு 110 மில்லியன் டொலர் நிதி!

September 30, 2026
பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் விடுதலையாக முடியாத நிலையில் நாமல்

September 30, 2026
தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது
செய்திகள்

தலவாக்கலையில் மாணவிக்கு தகாத காணொளிகளைக் காட்டிய குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது

September 30, 2026
அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்
செய்திகள்

அரச மரக்கிளை முறிந்து விழுந்து 6 லயன் அறைகள் சேதம்

September 30, 2026
Next Post
டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

டிப்பர் மோதியதில் இளைஞனின் கை முழங்கைக்கு கீழ் சிதைவு; கிளிநொச்சியில் பரபரப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.