தலவாக்கலை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவருக்கு வகுப்பறைக்குள் தகாத காணொளிகளைக் காட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த 25ஆம் திகதி தலவாக்கலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஆசிரியர் நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








