மெகசின் சிறைச்சாலை வளாகத்தின் சுவருக்கு மேல் வீசப்பட்டதாகக் கூறப்படும் பொதியொன்றில் இருந்து தடைசெய்யப்பட்ட பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பொதியிலிருந்து 30 கையடக்கத் தொலைபேசி மின்கலங்கள், 250 கிராம் சுண்ணாம்பு, 50 கிராம் புகையிலை, பாக்கு மற்றும் மாவா ஆகிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை சுவருக்கு மேல் குறித்த பொதியை வீசியவர்கள் தொடர்பில் கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாகஸ்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








