Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!

இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் ஏற்றுமதியில் இலங்கை முக்கிய சந்தையாக உருவெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் தரவுகளின்படி, 2026–27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் கப்பல் ஏற்றுமதி 1.36 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதே காலப்பகுதியில் இலங்கைக்கான இந்தியாவின் கப்பல் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட இலங்கைக்கான கப்பல் ஏற்றுமதி, இந்த ஆண்டு 56.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவில் கட்டப்படும் கப்பல்களுக்கான கேள்வி அதிகரித்து வருவதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையின் புவியியல் அமைவிடம் மற்றும் இந்தியப் பெருங்கடலின் முக்கிய கப்பல் பாதைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ளமை காரணமாக, இந்தியாவுக்கான முக்கிய கடல்சார் சந்தையாக இலங்கை மாறி வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தியக் கப்பல் கட்டுமான நிறுவனங்களுடனான உறவுகள் மேலும் வலுப்பெறும் பட்சத்தில், இலங்கையின் கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கப்பல் கட்டுமானத் துறைகளில் புதிய முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகள் உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் கடல்சார் தொழில்துறை உறவுகள் மேலும் வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

திருகோணமலையில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

October 18, 2026
நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ
செய்திகள்

நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ

October 18, 2026
எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்
செய்திகள்

எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்

October 18, 2026
யாழில் அதிக வேகம் கொண்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

யாழில் அதிக வேகம் கொண்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

October 18, 2026
கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்
உலக செய்திகள்

கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்

October 18, 2026
பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டம்; 1,200 பேர் கைது
செய்திகள்

பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டம்; 1,200 பேர் கைது

October 18, 2026
Next Post
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு