Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘பட்டுவத்தை சாமரின்’ சொத்துக்கள் முடக்கம்; ரூ.400 இலட்சம் பெறுமதியான வீடும் சொகுசு வாகனமும் உள்ளடக்கம்!

‘பட்டுவத்தை சாமரின்’ சொத்துக்கள் முடக்கம்; ரூ.400 இலட்சம் பெறுமதியான வீடும் சொகுசு வாகனமும் உள்ளடக்கம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ‘பட்டுவத்தை சாமர’ என அழைக்கப்படும் மனோஜ் சுரங்க லியனகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்குச் சொந்தமான சொகுசு வாகனம் மற்றும் சுமார் 400 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று மாடி வீடு உள்ளிட்ட சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த தகவல் இன்று (03) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த தகவல்களை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக பெருமளவு சொத்துக்களை சேர்த்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சொத்துக்களின் தோற்றம் மற்றும் சந்தேகநபரின் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

திருகோணமலையில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

October 18, 2026
நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ
செய்திகள்

நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஷிராந்தி ராஜபக்ஷ

October 18, 2026
எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்
செய்திகள்

எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்

October 18, 2026
யாழில் அதிக வேகம் கொண்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

யாழில் அதிக வேகம் கொண்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

October 18, 2026
கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்
உலக செய்திகள்

கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்

October 18, 2026
பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டம்; 1,200 பேர் கைது
செய்திகள்

பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டம்; 1,200 பேர் கைது

October 18, 2026
Next Post
“ஊழலுக்கு எதிராக போராடும் ஒரே தலைவர் நாமல்!” – மொட்டு கட்சி கூட்டத்தில் புகழாரம்

“ஊழலுக்கு எதிராக போராடும் ஒரே தலைவர் நாமல்!” – மொட்டு கட்சி கூட்டத்தில் புகழாரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு