Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

47 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தாக்குதலுக்காக முச்சக்கரவண்டியை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி சிறிசங்கபோ மாவத்தையில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலில் வீட்டில் இருந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

மேலும், தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்களின் தந்தை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, சம்பவம் இடம்பெற்ற அதே தினம் பாதுக்க, இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த முச்சக்கரவண்டியை தாக்குதலுக்காக வழங்கியதாக சந்தேகிக்கப்படும் நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தாக்குதலின் பின்னணி மற்றும் அதில் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை
அரசியல்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

September 14, 2026
ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!
செய்திகள்

ஆயுர்வேத கடை போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது!

September 14, 2026
ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைன் மீட்பு; உகண்டா பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

September 14, 2026
மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!
காணொளிகள்

மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைக்கு நிரந்தர தீர்வு கோரி பண்ணையாளர்கள் வலியுறுத்தல்!

September 14, 2026
சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!
செய்திகள்

சவுதி எண்ணெய்க் குழாய் மூடப்பட்டதைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வு!

September 14, 2026
சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்
அரசியல்

சட்டச் சிக்கல்களுக்கு தீர்வு கண்ட பின்னரே மாகாணசபைத் தேர்தல்; பிரதி அமைச்சர்

September 14, 2026
Next Post
வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு