இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஊடாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து வருகின்றது.
இதன் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லாதபோதிலும், அதனை நோக்கிய காற்றோட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில பகுதிகளில் 100 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் உள்ளிட்ட சில பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.







