சவூதி அரேபியாவின் 96வது தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற விசேட வரவேற்பு நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பங்கேற்றார்.
இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதரகத்தின் பதில் தூதுவர் மேன்மைதகு யாசிர் அப்துர்ரஹ்மான் அல்-ஹஸ்மி அவர்களின் ஏற்பாட்டில், நேற்று (24) கொழும்பு ITC ஹோட்டலில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் இலங்கைக்கான பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ராஜதந்திரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
சவூதி அரேபியாவின் தேசிய தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வரவேற்பு நிகழ்வு, இலங்கையில் உள்ள ராஜதந்திர மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது.










