காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலன்வத்தை பகுதியில் ‘எயார் ரஃபிள்’ (Air Rifle) துப்பாக்கி இயங்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (30) மதியம் எயார் ரஃபிள் துப்பாக்கி இயங்கியதில் காயமடைந்த பெண் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தெனியாய பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவராவார்.
உயிரிழந்த பெண், மற்றொரு பெண் மற்றும் இரு ஆண்களுடன் இணைந்து மவுண்ட்ஹோல்வத்தை, அம்பலங்கொட முகவரியில் உள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்துள்ளதுடன், துப்பாக்கி இயங்கியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அங்கு பணிபுரிந்த மற்றைய பெண்ணை காலி பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்







