Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டுநாயக்கவில் 8 கோடியே 66 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மேலும் இருவர் கைது!

கட்டுநாயக்கவில் 8 கோடியே 66 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மேலும் இருவர் கைது!

10 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தாய்லாந்திலிருந்து மலேசியா ஊடாக வருகை தந்த இருவர், 8 கோடியே 66 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் 35 வயதுடைய நெடுங்கேணியைச் சேர்ந்தவர் என்பதுடன், மற்றையவர் 46 வயதுடைய கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் தாய்லாந்தில் குறித்த போதைப்பொருளைக் கொள்வனவு செய்த பின்னர், மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்று, அங்கிருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான MH 179 என்ற விமானம் மூலம் இன்று (16) அதிகாலை 12 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் மதுபானப் போத்தல்கள் வைக்கப்பட்டிருந்த நான்கு பெட்டிகளில் இருந்து போத்தல்கள் அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக குஷ் ரக போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நான்கு பொதிகளாகப் பொதி செய்யப்பட்டிருந்த குறித்த போதைப்பொருளின் மொத்த எடை 8 கிலோகிராம் 664 கிராம்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று (16) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை, இதே விமானத்தில் முன்னதாக இலங்கை வந்த மற்றுமொரு நபரும் 4 கோடியே 38 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.

மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தொழில்நுட்ப நிபுணரான குறித்த நபரும் தாய்லாந்தில் போதைப்பொருளைக் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூர் ஊடாக இலங்கை வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்; பல சேவைகள் முடக்கம்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்; பல சேவைகள் முடக்கம்!

November 16, 2026
இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!
செய்திகள்

இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!

November 15, 2026
நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்
செய்திகள்

நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்

November 15, 2026
வேறு நபரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டாம்; பொதுநிர்வாக அமைச்சு
செய்திகள்

வேறு நபரிடம் வேலையை ஒப்படைக்க வேண்டாம்; பொதுநிர்வாக அமைச்சு

November 15, 2026
தனியார் பஸ் தொழில்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த நிவாரணமும் இல்லை – கெமுனு விஜேரத்தின குற்றச்சாட்டு!
செய்திகள்

தனியார் பஸ் தொழில்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த நிவாரணமும் இல்லை – கெமுனு விஜேரத்தின குற்றச்சாட்டு!

November 15, 2026
யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை
செய்திகள்

யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

November 15, 2026
Next Post
2027 வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்; பல சேவைகள் முடக்கம்!

2027 வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்; பல சேவைகள் முடக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு