நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
அத்துடன், ஞானசார தேரர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்தப் பயணத் தடை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பிறப்பிக்கப்பட்டுள்ள திறந்த பிடியாணையை பொலிஸ் மா அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.








