கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதன் மூலம் சிங்கள இளைஞர்கள் மத்தியில் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்க முடியும் என பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கஞ்சாவை சட்டபூர்வமாக்க வேண்டியதன் அவசியம் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
சிங்கள இளைஞர்களிடையே குழந்தைப் பிறப்பு வீதம் அதிகரிக்க வேண்டுமெனில், இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








