Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு

திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்த “புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்” (New Exporter Development Programme) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் கண்காட்சியும் இன்று (01) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், தொழில் மற்றும் தொழில்முயற்சித் துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மற்றும் அமைச்சின் பணிப்பாளர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாட்டின் புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குதல், உள்ளூர் தொழில்முயற்சியாளர்களை சர்வதேச வர்த்தகச் சந்தைக்கு அறிமுகப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்குதல் ஆகிய நோக்கங்களுடன் இவ்விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, ஏற்றுமதித் துறையில் காணப்படும் வாய்ப்புகள், ஏற்றுமதி நடைமுறைகள், சர்வதேச சந்தை வாய்ப்புகள், சந்தை அணுகுமுறைகள் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆதரவுகள் தொடர்பில் தொழில்முயற்சியாளர்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் புதிதாக காலடி எடுத்து வைக்கும் தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவான தொழில்முயற்சியாளர்கள் கலந்துகொண்டதுடன், தமது உற்பத்திப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்வது மற்றும் எதிர்காலத்தில் ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவுபடுத்துவது தொடர்பான தகவல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!
செய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

October 1, 2026
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
செய்திகள்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

October 1, 2026
தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!
செய்திகள்

தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!

October 1, 2026
துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்
உலக செய்திகள்

துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்

October 1, 2026
வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!
செய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!

October 1, 2026
நாட்டில் சில நோயாளர்கள் உயிரிழக்கும் பின்னனியில் போலி வைத்தியர்கள்
செய்திகள்

நாட்டில் சில நோயாளர்கள் உயிரிழக்கும் பின்னனியில் போலி வைத்தியர்கள்

October 1, 2026
Next Post
சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு