சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று (30) இடம்பெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.
இதன்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தமாடி முருகப்பெருமானை வழிபட்டனர்.
இதனையடுத்து, ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் பக்தி பூர்வமாக நிறைவடைந்தது.








