Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – கொம்பனித்தெரு பொலிஸாரால் குறித்த ஒளிப்பதிவாளர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரிடம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறியபோது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளருக்கும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட சம்பவத்தின்போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரி மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொம்பனித்தெரு பொலிஸார், குறித்த ஒளிப்பதிவாளரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியதுடன், பின்னர் அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் சுதந்திரமானதுமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனித்தெரு பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு
செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு

October 1, 2026
Next Post
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு