Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!

2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நச்சுப் பொருட்கள் அடங்கிய பழங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

இன்று (01) கொழும்பில் நடைபெற்ற “நச்சற்ற பழங்கள் பிள்ளைகளுக்கு” எனும் கருப்பொருளிலான தேசிய வேலைத்திட்டத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் உள்ள பழக்கடைகள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களைப் பதிவு செய்யும் பணிகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படும் எனக் கூறினார். 

நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் பழங்களைப் பழுக்க வைத்தல், இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் பண்ணைகளிலிருந்து பழங்களை அறுவடை செய்தல் மற்றும் நுகர்வோருக்கு நம்பிக்கையுடன் விநியோகித்தல் ஆகியவை குறித்து வர்த்தகர்களுடன் கலந்துரையாடி அவர்களை இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. 

வரும் மார்ச் மாதத்திற்குள் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் அடையாளங்காணப்பட்டு, அவற்றுக்குச் சிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள பழக்கடைகளை வரைபடமாக்கி, QR குறியீட்டின் ஊடாக நச்சற்ற பழங்களை விற்பனை செய்யும் இடங்களைக் கண்டறியக்கூடிய புதிய முறையொன்றும் தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

எதிர்வரும் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நச்சுப் பொருட்கள் அடங்கிய பழங்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார். 

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்களை புதிதாக நியமிக்கத் திட்டம்; சுகாதார அமைச்சர்!
செய்திகள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்களை புதிதாக நியமிக்கத் திட்டம்; சுகாதார அமைச்சர்!

November 16, 2026
இராணுவம் பிடித்த நிலம் மீளவில்லை; சொந்த நிலத்தில் வாழும் கனவுடன் கண்மூடிய தாய்!
செய்திகள்

இராணுவம் பிடித்த நிலம் மீளவில்லை; சொந்த நிலத்தில் வாழும் கனவுடன் கண்மூடிய தாய்!

November 16, 2026
2027 வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்; பல சேவைகள் முடக்கம்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்; பல சேவைகள் முடக்கம்!

November 16, 2026
கட்டுநாயக்கவில் 8 கோடியே 66 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மேலும் இருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 8 கோடியே 66 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மேலும் இருவர் கைது!

November 16, 2026
இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!
செய்திகள்

இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!

November 15, 2026
நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்
செய்திகள்

நெதர்லாந்து வேலைவாய்ப்பு என்ற வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம்

November 15, 2026
Next Post
அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு