Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பரீட்சைத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளரின் பிள்ளை பரீட்சையில் முதலிடம்; விசாரணை கோரும் ரோஹினி

பரீட்சைத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளரின் பிள்ளை பரீட்சையில் முதலிடம்; விசாரணை கோரும் ரோஹினி

19 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பரீட்சைத் திணைக்களத்தின் இரகசியப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவரின் பிள்ளை, சட்டமா அதிபர் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பரீட்சையொன்றில் முதலிடம் பெற்றுள்ளதாக மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், பரீட்சைத் திணைக்களத்தின் இரகசியப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், குறித்த பரீட்சை நடைபெறுவதற்கு முன்னரே பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டார்.

எனினும், அவர் ஜூலை 15ஆம் திகதியே பதவியிலிருந்து விலகியதாகவும், குறித்த பரீட்சை ஆகஸ்ட் 2ஆம் திகதி நடைபெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னரே பரீட்சைக்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை அணுகுவதற்கான முழுமையான வாய்ப்பு குறித்த அதிகாரிக்கு இருந்ததாகவும் ரோஹினி விஜேரத்ன குற்றஞ்சாட்டினார்.

அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்த பின்னரே அவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், இதுவும் பொதுமக்களின் நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு ஒப்பானது எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, இந்த விவகாரங்கள் தொடர்பிலும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு உரிய கவனம் செலுத்தி விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார பிணையில் விடுதலை!
செய்திகள்

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார பிணையில் விடுதலை!

November 18, 2026
சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

November 18, 2026
தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!

November 18, 2026
மாகாணசபைத் தேர்தல் ஒருபோதும் நடைபெறாது; நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாகச் சிறையில் வைத்திருக்கவே முயற்சி – இரா. அர்ச்சுனா
காணொளிகள்

மாகாணசபைத் தேர்தல் ஒருபோதும் நடைபெறாது; நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாகச் சிறையில் வைத்திருக்கவே முயற்சி – இரா. அர்ச்சுனா

November 18, 2026
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!
உலக செய்திகள்

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!

November 18, 2026
நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 18, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு