பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜாங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காகவே இருவரும் இன்று அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







