சவுதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் மீண்டும் தாக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும், சிறைச்சாலைக்குள் அவரது உயிருக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே சவுதி அரேபிய சிறைச்சாலை அதிகாரிகள், இலங்கை அரசு, வெளிவிவகார அமைச்சு மற்றும் சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, அனோஜனின் உயிருக்கும் உடல் பாதுகாப்பிற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.








