Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி நவம்பர் 30இல் ஆசிரியர்கள், அதிபர்கள் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கோரி நவம்பர் 30இல் ஆசிரியர்கள், அதிபர்கள் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு!

28 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட கல்வித்துறை ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் வரவு செலவுத் திட்டத்தில் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் 30ஆம் திகதி சுகவீன விடுமுறை அறிக்கையைச் சமர்ப்பித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தப் பணிப்புறக்கணிப்பில் நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 250,000 ஆசிரியர்களும், 10,110 பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பிரிவெனாக் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான உரிய வேலைத்திட்டம் இதுவரை முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ள கல்வி தொடர்பான விசேட நாடாளுமன்ற விவாதத்திலாவது ஆசிரியர் – அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் பல தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மத்திய பெருவில் 6.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலக செய்திகள்

மத்திய பெருவில் 6.9 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

November 21, 2026
அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!
செய்திகள்

அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!

November 21, 2026
பிள்ளையானின் பிணை மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவிப்பு!
செய்திகள்

பிள்ளையானின் பிணை மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவிப்பு!

November 21, 2026
மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்
செய்திகள்

மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்

November 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்

November 20, 2026
மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை

November 20, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு