Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானின் பிணை மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவிப்பு!

பிள்ளையானின் பிணை மனு ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு; சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவிப்பு!

16 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த தினத்தில் பிணை கோரிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டையும் ஆட்சேபனைகளையும் முன்வைக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிள்ளையான் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர த சில்வா, தனது சேவை பெறுநர் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், ஓராண்டு தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, கைது செய்யப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில், குறித்த சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் பிணை கோரிக்கையைப் பரிசீலிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனடிப்படையில், பிள்ளையானை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

எனினும், மனுவில் உள்ள சில விடயங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

இதனையடுத்து, தேவையான திருத்தங்களை மேற்கொண்டு புதிய மனுவைச் சமர்ப்பிக்க மனுதாரர் தரப்பு இணக்கம் தெரிவித்தது.

இதன்படி, திருத்தப்பட்ட மனுவைச் சமர்ப்பிக்கவும், பிணை வழங்குவதற்கு எதிரான ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை ஜனவரி 18ஆம் திகதி முன்வைக்கவும் சட்டமா அதிபர் தரப்புக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த தினத்தில் பிள்ளையானின் பிணை கோரிக்கை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!
செய்திகள்

அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!

November 21, 2026
மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்
செய்திகள்

மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது நலன்புரி மற்றும் மருத்துவ முகாம்

November 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முக்கிய தகவல்களை வழங்கத் தயாராகும் பேர்னாட் அடிகளார்

November 20, 2026
மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை

November 20, 2026
இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

இலங்கையில் ஐஸ்கிரீம் வகைகளின் தரம் குறித்து விசேட சோதனை; அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

November 20, 2026
வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயது நபர் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
செய்திகள்

வவுனியா ஓமந்தையில் காட்டுக்குச் சென்ற 60 வயது நபர் மாயம்; தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

November 20, 2026
Next Post
அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!

அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு