தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவை, கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை (08) அன்று அழைத்துச் செல்லப்பட மாட்டார் எனச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக பலேப்பத்து மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கையில், ஷிரந்தி ராஜபக்ச சிறைச்சாலை மருத்துவமனையில் விசேட மருத்துவர் ஒருவரால் வியாழக்கிழமை (08) அன்று பரிசோதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அவ்வாறு பரிசோதனை செய்ததன் பின்னர், அவரை மேலதிக பரிசோதனைகளுக்காக விசேட மருத்துவர் ஒருவர் வியாழக்கிழமை (09) கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய, அவரை தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.







