மட்டக்களப்பு, பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில், பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் 48 ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (09) இடம்பெற்றது.
“சமயமும் சமூகமும் வளர்ப்போம்” எனும் தொனிப்பொருளில், ஆலயத் தலைவர் கி. கங்கேஸ்வரனின் பிரதான அனுசரணையுடன், ஆலய நிர்வாக சபையினரால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆலயத்திற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டுப் பிரார்த்தனைக்காக வருகை தரும் குறித்த பாடசாலை மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் பங்களிக்கும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நோக்கில், 48 ஆசிரியர்களுக்கான நினைவுச் சின்னங்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் மாணவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.
“ஒவ்வொரு பாடசாலையும் ஒவ்வொரு ஆலயத்திற்குச் சமமானது” என்ற கருத்தை வலியுறுத்தி, சமயத்தையும் சமூகத்தையும் இணைத்து கல்வி வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

















