விசாரணைக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷ, கண் பாதிப்புக்கான மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக இன்று (09) காலை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், நிபுணர் மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, நேற்று (08) சிறைச்சாலை மருத்துவ நிபுணர் ஒருவரால் பரிசோதிக்கப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு, கண் தொடர்பான பாதிப்பைக் கருத்திற்கொண்டு தேசிய கண் மருத்துவமனையின் நிபுணர் ஒருவரிடம் மேலதிக பரிசோதனை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதற்கமையவே, இன்று அவர் தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.







