Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை – தாய்லாந்து இடையில் கைச்சாத்தான விசா விலக்கு ஒப்பந்தம்!

இலங்கை – தாய்லாந்து இடையில் கைச்சாத்தான விசா விலக்கு ஒப்பந்தம்!

24 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

கண்டி அஸ்கிரி மகா விகாரையில் நடைபெறும் அரச கடின சீவர பூஜை புண்ணிய நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் பிரதிநிதியாக அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த தாய்லாந்து பிரதிப் பிரதமரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அன்புடன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று, மத மற்றும் கலாசார உறவுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே நிலவும் பாரம்பரிய நட்புறவை இவ்வாறான உயர்மட்ட இராஜதந்திர சந்திப்புகள் மேலும் வலுப்படுத்தும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தாய்லாந்து பிரதமரும் இலங்கைக்கு விஜயம் செய்ய ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதிப் பிரதமர், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற கண்டி எசல பெரஹெராவைக் கண்டுகளிப்பதற்காக தாய்லாந்து பிரதமருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாப் பயணங்களை ஊக்குவிப்பதுடன், மக்களிடையிலான தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றும் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவும், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் பரிமாறிக் கொண்டனர்.

இந்த நடவடிக்கை இரு நாடுகளின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், வர்த்தக உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் சாதகமான சூழலை உருவாக்கும் என தாய்லாந்து பிரதிப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்க தாய்லாந்து தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்தார்.

இதன்போது தாய்லாந்தில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தொடர்பான விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு வழங்கப்படும் அதே மரியாதையுடன் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்ட தாய்லாந்து பிரதிப் பிரதமர், இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பில் கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், எதிர்காலத்தில் தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் தாய்லாந்து பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா உள்ளிட்ட இலங்கை அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும், இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் தலைமையிலான தாய்லாந்து அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம்; அரசாங்கம் விளக்கம்!
செய்திகள்

நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இதுவே காரணம்; அரசாங்கம் விளக்கம்!

November 23, 2026
கண்டி- கொழும்பு பிரதான வீதி இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்படும்!
செய்திகள்

கண்டி- கொழும்பு பிரதான வீதி இன்று நள்ளிரவு முதல் தற்காலிகமாக மூடப்படும்!

November 23, 2026
கொழும்பு துறைமுக எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரை; 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு!
செய்திகள்

கொழும்பு துறைமுக எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரை; 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு!

November 23, 2026
பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு; பொலிஸ் பாயிஸை ஐந்து செய்ய சர்வதேச பிடியாணை
செய்திகள்

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு; பொலிஸ் பாயிஸை ஐந்து செய்ய சர்வதேச பிடியாணை

November 23, 2026
சிலாபத்தில் 100 மருந்து மாத்திரைகளுடன் மருத்துவர் கைது; பொலிஸ் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிப்பு!
செய்திகள்

சிலாபத்தில் 100 மருந்து மாத்திரைகளுடன் மருத்துவர் கைது; பொலிஸ் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிப்பு!

November 23, 2026
யாழ் கொட்டடி கடற்கரையில் சடலம் மீட்பு
செய்திகள்

யாழ் கொட்டடி கடற்கரையில் சடலம் மீட்பு

November 23, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.