கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதியில் இன்று (23) இரவு 11.00 மணி முதல் நாளை (24) காலை 6.00 மணி வரை போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கீழ் கடுகண்ணாவ பகுதியில் வீதியின் மீது விழும் அபாயம் உள்ள பாறைகளை அகற்றுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை முன்னெடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
மேலும், வீதி மூடல் தொடர்பான தேவையான அறிவித்தல்கள் அவசர நடவடிக்கை மையத்தினால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த காலப்பகுதியில் இந்த வீதியைப் பயன்படுத்தி பயணிக்கத் திட்டமிட்டுள்ள சாரதிகள் மற்றும் பொதுமக்கள் வீதி மூடல் தொடர்பில் அவதானம் செலுத்துவதுடன், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







