Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

இலங்கையின் புதிய சட்ட மூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

53 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) மட்டக்களப்பு நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இப்போராட்டமானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடிப்படை அமைப்புகள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்ட பேரணிப் பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு கண்டனக் கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக ‘பிஎஸ்ரிஏ’ சட்ட மூலம் வேண்டாம்…!” என்ற பிரதான பதாகையுடன் திரண்ட அவர்கள், “நாங்கள் கேட்டது மாற்றம்; ஆனால் கிடைத்தது ஏமாற்றம்!” என்ற வாசகம் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். மேலும், “அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் வேண்டாம்!”, “சட்டம் பாதுகாக்க வேண்டும்; மாறாக பயமுறுத்தக் கூடாது!” மற்றும் “கேட்பது ஜனநாயகம்; தருவது அடக்குமுறை” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலங்களை அரசு உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகத்தையும் மக்களின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

இப்போராட்டத்தின் போது வெளியிடப்பட்ட அறிக்கையில், “பிஎஸ்ரிஏ”’ சட்டமூலமானது மக்களின் கூட்டம் கூடும் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், எழுத்துரிமை போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை முடக்கும் நோக்கில் அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

பொலிஸ் அதிகாரி, இராணுவம், கடலோரக் காவல்படை ஆகியவற்றுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்குவதன் மூலம், பொதுமக்கள் கூட்டம் கூடுவதையும் தங்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதையும் தடுக்கவும், கைது செய்யவும் வழிவகை செய்யப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, இச்சட்டமூலத்தின் சரத்து 19 மற்றும் 20 இன் படி, பொலிஸாருக்கு இருப்பது போல இராணுவம் மற்றும் கடலோரக் காவல்படைக்கும் சந்தேக நபர்களைக் கைது செய்யும், வீடுகளுக்குச் சென்று சோதனையிடும், பிடியாணை இல்லாமல் கைது செய்யும் அதிகாரம் வழங்கப்படுகின்றது. மேலும், சரத்து 26 இன் படி கைது செய்யப்பட்டவரை 48 மணித்தியாலங்களில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த வழிசெய்வது அரசியலமைப்பின் 13.2 உறுப்புரை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு எதிரானதாகும் என்றும், சரத்து 27 இன் படி சந்தேகநபரை இரண்டு வருடங்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க அதிகாரம் அளிக்கப்படுவதாகவும், சரத்து 51 இன் படி பொலிஸ் அதிகாரி ஆபத்து நடைபெறும் என கருதினால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதையோ அல்லது ஊர்வலம் செல்வதையோ தடுக்க முடியும் என்றும் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

கட்டமைப்பு மாற்றம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான வாழ்வு என உறுதியளித்து 159 ஆசனங்களுடன் மக்கள் அதிபெரும்பான்மை ஆணையைக் கொடுத்துள்ள நிலையில், கொண்டுவரவுள்ள இச்சட்டத்தால் பொதுமக்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள், சிவில் அமைப்புகள் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைக் குரல்கள் நசுக்கப்படப் போகின்றன எனச் சுட்டிக்காட்டி Pளுவுயு சட்டமூலத்தை உடனடியாகக் கைவிடுமாறு தேசிய மக்கள் சக்தி அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரின் பிரதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் ஆகியவற்றிற்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு
செய்திகள்

மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு

October 9, 2026
வாகன உரிமை மாற்றத்துக்கு 14 நாட்கள் மட்டுமே; டிசம்பர் 1 முதல் விதிகள் கடுமையாகும் – DMT எச்சரிக்கை!
செய்திகள்

வாகன உரிமை மாற்றத்துக்கு 14 நாட்கள் மட்டுமே; டிசம்பர் 1 முதல் விதிகள் கடுமையாகும் – DMT எச்சரிக்கை!

October 9, 2026
சண்டிலிப்பாயில் ஐஸ் போதைப்பொருள், 300 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞர் கைது!
செய்திகள்

சண்டிலிப்பாயில் ஐஸ் போதைப்பொருள், 300 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞர் கைது!

October 9, 2026
வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்! CERT எச்சரிக்கை!
செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்! CERT எச்சரிக்கை!

October 9, 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!

October 9, 2026
உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!
செய்திகள்

உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!

October 9, 2026
Next Post
மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு

மருதமுனை கடற்கரையில் 69 வயதுடைய நபர் சடலமாக மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.