நாடு முழுவதும் கடந்த 17ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின்தடையைத் தொடர்ந்து செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் தற்போது வெற்றிகரமாக மீண்டும் தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.
குறித்த திடீர் மின்தடையால் நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் முற்றாகச் செயலிழந்திருந்தன.
இதனையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிலையத்தை உடனடியாக தேசிய மின் கட்டமைப்பில் இணைக்காமல், சில நாட்களுக்குப் பின்னரே இணைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.
அவசர நிலைமைகளின்போது பின்பற்றப்படும் வழமையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது மூன்று மின் பிறப்பாக்கிகளும் மீண்டும் இயக்கப்பட்டு தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








