மாவனெல்லை, கிரிகஹ சந்திப் பகுதியில் இரண்டு கைத்துப்பாக்கிகள், 12 போர் ரகத் துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, இரண்டு கைத்துப்பாக்கிகள், ஐந்து மெகசின்கள், 156 ஈய உருண்டைகள், ஒரு 12 போர் ரகத் துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 20 தோட்டாக்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 72 மணிநேர தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








