Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!

கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் கூரை சூரிய மின்சார உற்பத்தியாளர்களுக்குத் தற்போது நடைமுறையில் உள்ள Net Accounting முறைமையை நீக்கி, அதற்குப் பதிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தையும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தையும் ஒரே நேரத்தில் கணக்கிடும் புதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் பகல் நேரத்தில் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தை தேசிய மின்வலையமைப்புக்கு வழங்கி, இரவு நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத்தை ஈடுசெய்யும் தற்போதைய நடைமுறையில் மாற்றம் ஏற்படவுள்ளது.

தற்போதைய முறையில், சில சூரிய மின்சாரப் பாவனையாளர்கள் தேசிய மின்வலையமைப்புக்கு மேலதிக மின்சாரத்தை வழங்குவதன் மூலம் தமது மின்சாரக் கட்டணத்தை முழுமையாகக் குறைக்க முடிகிறது. எனினும், பகல் மற்றும் இரவு நேர மின்சாரத்தின் பொருளாதாரப் பெறுமதி வேறுபடுவதால், இந்த முறைமை மின்சாரக் கட்டமைப்பின் உண்மையான செலவுகளைப் பிரதிபலிக்கவில்லை என அரசாங்கத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், மாலை நேரங்களில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் காலப்பகுதியில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கவும், பகல் நேரத்தில் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் புதிய முறைமை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் சூரிய மின்சார உற்பத்தித் திறனை சுமார் 1,500 மெகாவொட்டால் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், கூரை சூரிய மின்சாரக் கட்டமைப்புகளின் வருடாந்த அதிகரிப்பை 200 முதல் 250 மெகாவொட் வரை மட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய சூரிய மின்சாரத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் முறைக்குப் பதிலாக, குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வரும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போட்டி ஏல முறையையும் அறிமுகப்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

தேசிய மின்வலையமைப்பின் கொள்ளளவு குறைவாக உள்ள பகுதிகளில், மேலதிக மின்சாரத்தை வலையமைப்புக்கு அனுப்ப முடியாத வகையிலான இணைப்புகளை ஊக்குவிப்பதுடன், பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்கலங்களில் சேமித்து இரவில் பயன்படுத்தும் முறையையும் ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் தொடர்பாக அரசாங்கம் பல்வேறு கட்டண மற்றும் மின்மானி நடைமுறைகளைப் பரிசீலித்து வருவதாக தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் டொக்டர் பிரதீப் பெரேரா தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

October 25, 2026
மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!
செய்திகள்

மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!

October 25, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!
உலக செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!

October 25, 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி
செய்திகள்

பகிரங்க மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி

October 25, 2026
குளக்கரையில் மோட்டார் குண்டு; கிணற்றுக்குள் துப்பாக்கிப் பாகங்கள்!; திருக்கோவில் பொலிஸார் விசாரணை
செய்திகள்

குளக்கரையில் மோட்டார் குண்டு; கிணற்றுக்குள் துப்பாக்கிப் பாகங்கள்!; திருக்கோவில் பொலிஸார் விசாரணை

October 25, 2026
ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி என பரவும் செய்தி; ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை
செய்திகள்

ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி என பரவும் செய்தி; ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை

October 25, 2026
Next Post
இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு