அம்பாறை மாவட்டம், இறக்காமம் 07 – நைனாகாடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நிந்தவூர், கோவில் வீதி, 19ஆம் பிரிவைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க மீராதஸ்லிம் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டல் ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றிவந்த இவர், மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்த காட்டு யானையைக் கண்டு தப்பியோடியுள்ளார். இதன்போது இடறி விழுந்த அவரை யானை மிதித்ததில் உயிரிழந்துள்ளதாகப் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.








