Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!

கொழும்பிலிருந்து சவூதி அரேபியாவுக்கான இரு நகர விமான சேவைகள் நவம்பர் 1 வரை இடைநிறுத்தம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சவூதி அரேபியாவின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, கொழும்பிலிருந்து ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான நேரடி விமான சேவைகளை நவம்பர் 1ஆம் திகதி வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவில் பொதுமக்கள் மற்றும் எரிசக்திக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் குறித்த செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் மற்றும் உம்ரா யாத்திரிகர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவலைகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், அண்மைய பாதுகாப்பு நிலைமைகளால் எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி, முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் உம்ரா பயண ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. பிராந்திய பதற்றம் மற்றும் விமான சேவைகளில் ஏற்படக்கூடிய இடையூறுகளைக் கருத்திற்கொண்டு, யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை ஹஜ் மிஷன் அறிவித்துள்ளது.

ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் தெரிவிக்கையில், உம்ரா யாத்திரிகர்களின் எண்ணிக்கை தொடர்பான துல்லியமான தரவுகள் பொதுவெளியில் இல்லை என்றும், ஜித்தாவிலிருந்து இலங்கைக்கான விமான சேவைகள் தொடர்ந்து இடம்பெறுவதால் யாத்திரிகர்கள் நாடு திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டால், அவர்களைப் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை உம்ரா பயண ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், சவூதி அரேபியாவுக்குச் செல்லத் திட்டமிடும் இலங்கையர்கள் விமான சேவைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு ஜித்தாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகமும் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி அறிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி
காணொளிகள்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி

October 25, 2026
இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
செய்திகள்

இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

October 25, 2026
கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!
செய்திகள்

கூரை சூரிய மின்சாரத்திற்கு புதிய கட்டண முறைமை; குறைந்த விலையில் மின்சாரம் வழங்க முன்வருவோருக்கு முன்னுரிமை!

October 25, 2026
மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!
செய்திகள்

மின்சார வாகன மின்கல முகாமையில் பெரும் குறைபாடு; கணக்காய்வில் அம்பலம்!

October 25, 2026
குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!
உலக செய்திகள்

குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழப்பு!

October 25, 2026
பகிரங்க மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி
செய்திகள்

பகிரங்க மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி

October 25, 2026
Next Post
மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு