காலி, அஹங்கம – கதலுவ பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகக் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டிப்பர் ரக வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது, எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.









