Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சாரதி காயம்!

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சாரதி காயம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

களுத்துறை, நாகொட பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அதன் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை குற்றப்பிரிவின் பொலிஸ் குழுவினர், போம்புவெல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை நிறுத்துமாறு அதன் சாரதிக்கு உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், பொலிஸாரின் உத்தரவைப் புறக்கணித்த சாரதி, முச்சக்கர வண்டியை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்திச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் சுமார் நான்கு கிலோமீற்றர் தூரம் வரை குறித்த முச்சக்கர வண்டியைப் பின்தொடர்ந்துள்ளனர். பின்னர், நாகொட பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சாரதி, நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் களுத்துறை, ராஜவத்தை பகுதியைச் சேர்ந்த ‘ராஜவத்தை சஞ்சு’ என அழைக்கப்படும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து முச்சக்கர வண்டியைச் சோதனையிட்ட பொலிஸார், அதிலிருந்து போதைப்பொருட்களையும் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!
செய்திகள்

35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!

October 26, 2026
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!

October 26, 2026
நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!
செய்திகள்

நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!

October 26, 2026
கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு; பிரதமர் ஹரிணி!
செய்திகள்

கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு; பிரதமர் ஹரிணி!

October 26, 2026
வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!
செய்திகள்

வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!

October 26, 2026
இலங்கை மருத்துவமனைகளில் கொலோஸ்டமி பைகளுக்குத் தட்டுப்பாடு!
செய்திகள்

இலங்கை மருத்துவமனைகளில் கொலோஸ்டமி பைகளுக்குத் தட்டுப்பாடு!

October 26, 2026
Next Post
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு