Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!

35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர், அதன் சொந்த இடத்தில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (25) நடைபெற்றது.

இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் காரணமாக 1990ஆம் ஆண்டு வலிகாமம் வடக்குப் பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, காங்கேசன்துறை தபால் நிலையத்தின் செயற்பாடுகளும் அதன் சொந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டன.

பின்னர், அப்பகுதியில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதையடுத்து, தபால் நிலையம் தனியார் கட்டடமொன்றில் தற்காலிகமாக இயங்கி வந்தது.

இந்நிலையில், காங்கேசன்துறை உப தபாலகம் அமைந்திருந்த பகுதியில் 32.09 மில்லியன் ரூபா செலவில் புதிய தபால் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் மே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அரச அதிகாரிகள், அரச அலுவலகங்களின் இணைப்பாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நீண்டகால இடப்பெயர்வுக்குப் பின்னர், காங்கேசன்துறை தபால் நிலையம் அதன் சொந்த இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கப்படுவது அப்பகுதியின் பொது சேவைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கனடா மற்றும் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளிடம் பணம் வசூலிக்கும் மோசடி
உலக செய்திகள்

கனடா மற்றும் இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளிடம் பணம் வசூலிக்கும் மோசடி

October 26, 2026
அஹங்கமவில் டிப்பர் வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐவர் காயம்!
செய்திகள்

அஹங்கமவில் டிப்பர் வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐவர் காயம்!

October 26, 2026
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!

October 26, 2026
பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சாரதி காயம்!
செய்திகள்

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சாரதி காயம்!

October 26, 2026
நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!
செய்திகள்

நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!

October 26, 2026
கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு; பிரதமர் ஹரிணி!
செய்திகள்

கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு; பிரதமர் ஹரிணி!

October 26, 2026
Next Post
அஹங்கமவில் டிப்பர் வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐவர் காயம்!

அஹங்கமவில் டிப்பர் வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐவர் காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு