Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவில் காணாமல் போன 3 மீனவர்கள்; தொடரும் தீவிர தேடுதல் நடவடிக்கை!

முல்லைத்தீவில் காணாமல் போன 3 மீனவர்கள்; தொடரும் தீவிர தேடுதல் நடவடிக்கை!

56 minutes ago
in செய்திகள்

முல்லைத்தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்று காணாமல் போன மூன்று மீனவர்களை தேடும் நடவடிக்கை இன்றும் (29) முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த 26ஆம் திகதி காலை ‘MLT/1742’ என்ற இலக்கமுடைய படகில் தூண்டில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

புதுமாத்தளனைச் சேர்ந்த அன்ரனிஜூட், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஸ்ரீபுஷ்பராசா மற்றும் மன்னாரைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வான் ஆகியோரே இவ்வாறு காணாமல்போனவர்களாவர்.

காணாமல்போன மீனவர்களையும் அவர்களது படகையும் கண்டறிவதற்காக இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் இணைந்து நேற்று (28) தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

மீனவர்கள் 8 படகுகளில் சென்று தேடுதலில் ஈடுபட்டபோதிலும் எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில், நேற்று மாலை வேளையானதால் கரை திரும்பினர். இருப்பினும், இதுவரை மீனவர்களோ அல்லது படகோ கண்டறியப்படவில்லை.

அர்னாப் புயல் காரணமாக நிலவிய பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பினால், குறித்த படகு இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி அயல்நாடுகளின் கடற்பரப்பிற்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறும் காணப்படுகிறது.

எனவே இன்றைய தினமும் விமானப்படை மற்றும் கடற்படையின் உதவியோடு தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்களும் இன்று காலையில் மீண்டும் தேடுதல் பணியைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, காணாமல்போன மீனவர்கள் குறித்த தகவல்களை இந்தியா, பங்களாதேஷ் உள்ளிட்ட அயல்நாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்து, சர்வதேச ரீதியிலான தகவல் பரிமாற்றம் மற்றும் தேடுதல் உதவிகளைப் பெறுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முல்லைத்தீவு மாவட்டச் செயலகமும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை!
செய்திகள்

இந்தோனேசியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; இலங்கைக்கு பாதிப்பில்லை!

October 29, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 454 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 454 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது!

October 29, 2026
பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு சந்தேக நபர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு சந்தேக நபர் உயிரிழப்பு!

October 29, 2026
வெளிப்புற அட்டையை பார்த்து மேலும் சில தமிழ் நூல்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு
செய்திகள்

வெளிப்புற அட்டையை பார்த்து மேலும் சில தமிழ் நூல்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு

October 29, 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயம்; மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயம்; மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை

October 29, 2026
ஹோமாகம பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்!
செய்திகள்

ஹோமாகம பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்!

October 29, 2026
Next Post
வெளிப்புற அட்டையை பார்த்து மேலும் சில தமிழ் நூல்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு

வெளிப்புற அட்டையை பார்த்து மேலும் சில தமிழ் நூல்கள் சுங்கத்தில் தடுத்து வைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு