Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகள் 30 கிலோகிராம் வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுமார் 3 முதல் 4 மணிநேரம் பயணிக்கும் இந்தக் கப்பல், வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களிலும் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.

இதுவரை நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்குப் பயணிக்கும் ஒருவருக்கு 10 கிலோகிராம் வரையிலும், காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்குப் பயணிக்கும் ஒருவருக்கு 15 கிலோகிராம் வரையிலும் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பயணிகளின் கோரிக்கைக்கு அமைய பண்டிகைக் காலச் சலுகையாக ஒரு வழிப் பயணத்திற்கான கட்டணம் 6,000 இந்திய ரூபாவிலிருந்து 5,500 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரு திசைகளிலும் பயணிகள் 30 கிலோகிராம் வரையிலான பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கப்பல் போக்குவரத்து நிறுவனத்தின் முதன்மை வணிக அலுவலர் சிவராம் நாகப்பட்டினத்தில் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஆன்மிகம், சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக இந்தியா – இலங்கை இடையே 55,310 பயணிகள் பயணம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் விடுக்கப்படும் நாட்களைத் தவிர, ஏனைய அனைத்து நாட்களிலும் கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களாகிய 18 பேர் பொலிஸ் கண்காணிப்பில்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களாகிய 18 பேர் பொலிஸ் கண்காணிப்பில்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்!

November 5, 2026
இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!
செய்திகள்

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!

November 5, 2026
தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்; இருக்கை முன்பதிவுகள் வேகமாக நிறைவு!
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்; இருக்கை முன்பதிவுகள் வேகமாக நிறைவு!

November 5, 2026
208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1500 பேர் பணியிடை நீக்கம்
செய்திகள்

208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1500 பேர் பணியிடை நீக்கம்

November 5, 2026
வவுனியாவில் எரிவாயு பதுக்கல் அம்பலம்; 33 லிட்ரோ சிலிண்டர்கள் அதிரடியாக மீட்பு!
செய்திகள்

வவுனியாவில் எரிவாயு பதுக்கல் அம்பலம்; 33 லிட்ரோ சிலிண்டர்கள் அதிரடியாக மீட்பு!

November 5, 2026
எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!
உலக செய்திகள்

எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

November 5, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு