Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்; இருக்கை முன்பதிவுகள் வேகமாக நிறைவு!

தீபாவளியை முன்னிட்டு விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்; இருக்கை முன்பதிவுகள் வேகமாக நிறைவு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கொழும்பிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இணைந்து விசேட பேருந்து சேவைகளை ஆரம்பித்துள்ளன.

இம்முறை தீபாவளிப் பண்டிகை எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், நவம்பர் 6ஆம் திகதி முதல் பெருமளவிலான பயணிகள் கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம் ஊடாகத் தமது சொந்த ஊர்களுக்குப் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, நவம்பர் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து ஹட்டன், தலவாக்கலை, நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான பெரும்பாலான இருக்கைகள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான இருக்கை முன்பதிவுகளும் வேகமாக இடம்பெற்று வருகின்றன.

எனவே, பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய பயணிகள் நெரிசல் மற்றும் இறுதி நேர அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காகப் பயணிகள் முன்கூட்டியே தங்களுக்கான பேருந்து இருக்கைகளை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்காக 1315.lk அல்லது sltbeseat.lk ஆகிய இணையத்தளங்கள் ஊடாகப் பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!
செய்திகள்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் பயணக் கட்டணம் குறைப்பு; 15 கிலோ பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி!

November 5, 2026
யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களாகிய 18 பேர் பொலிஸ் கண்காணிப்பில்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களாகிய 18 பேர் பொலிஸ் கண்காணிப்பில்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்!

November 5, 2026
இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!
செய்திகள்

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!

November 5, 2026
208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1500 பேர் பணியிடை நீக்கம்
செய்திகள்

208 பொலிஸ் அதிகாரிகள் கைது; 1500 பேர் பணியிடை நீக்கம்

November 5, 2026
வவுனியாவில் எரிவாயு பதுக்கல் அம்பலம்; 33 லிட்ரோ சிலிண்டர்கள் அதிரடியாக மீட்பு!
செய்திகள்

வவுனியாவில் எரிவாயு பதுக்கல் அம்பலம்; 33 லிட்ரோ சிலிண்டர்கள் அதிரடியாக மீட்பு!

November 5, 2026
எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!
உலக செய்திகள்

எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

November 5, 2026
Next Post
இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!

இலங்கையில் நுரையீரல் புற்றுநோய் 50% அதிகரிப்பு; புகைபிடிக்காதவர்களுக்கும் பாதிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு