Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கற்பானையில் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பனம் விதைகள் நடுகை!

மட்டு கற்பானையில் யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்ட பனம் விதைகள் நடுகை!

1 hour ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் யானை – மனித மோதலைக் குறைக்கும் நோக்கில், மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கற்பானை கிராமத்தில் 20,000 பனம் விதைகளை நடுகை செய்யும் விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக 10,000 பனம் விதைகள் நேற்று வியாழக்கிழமை (05) கற்பானை பகுதியில் நடுகை செய்யப்பட்டுள்ளன.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வ. ஜீவானந்தன் உள்ளிட்ட அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து பனம் விதைகளை நடுகை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

குறித்த திட்டத்திற்காக யாழ்ப்பாணத்திலிருந்து தரமான 20,000 பனம் விதைகள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவற்றில் 10,000 விதைகள் முதற்கட்டமாக நடுகை செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய விதைகளையும் அடுத்த கட்டமாக நடுகை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அனுசரணையுடன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலக ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட களப்பயணத்தின் ஒரு பகுதியாக, மாவட்ட ஊடகவியலாளர்கள் கற்பானை பகுதிக்கு நேரடியாகச் சென்று இத்திட்டத்தைப் பார்வையிட்டதுடன், நடுகைச் செயற்பாட்டிலும் பங்கேற்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை – மனித மோதல் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் இத்தகைய திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்பு
செய்திகள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் 4,056 துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்பு

November 6, 2026
உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!
அரசியல்

உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

November 6, 2026
மழைக்கு மத்தியிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மட்டக்களப்பு மக்கள்!
செய்திகள்

மழைக்கு மத்தியிலும் தீபாவளிக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மட்டக்களப்பு மக்கள்!

November 6, 2026
எரிபொருள் முறைகேட்டில் சிக்கிய வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர்; அரசாங்கத்துக்கு பணத்தை மீளச் செலுத்தினார்!
செய்திகள்

எரிபொருள் முறைகேட்டில் சிக்கிய வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநர்; அரசாங்கத்துக்கு பணத்தை மீளச் செலுத்தினார்!

November 6, 2026
மட்டு குளாம்பியாமடு வீதியில் வேன் – கார் நேருக்கு நேர் மோதி விபத்து!
செய்திகள்

மட்டு குளாம்பியாமடு வீதியில் வேன் – கார் நேருக்கு நேர் மோதி விபத்து!

November 6, 2026
அஸ்வெசும பட்டியலில் பெயர் இல்லையா?; உடனடியாகச் சரிபார்க்குமாறு அறிவிப்பு
செய்திகள்

அஸ்வெசும பட்டியலில் பெயர் இல்லையா?; உடனடியாகச் சரிபார்க்குமாறு அறிவிப்பு

November 6, 2026
Next Post
உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

உத்தியோகபூர்வ அரசியல் கட்சி என்ற அந்தஸ்தை இழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு