பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தியும் சுகாதார துறையில் நிலவும் பிரச்சினை தீர்க்குமாறு கோரியும் இன்று (06) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், மருத்துவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சுகாதாரத் துறையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தியும் இதன்போது கவன ஈர்ப்பு பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் எஸ்.மதனழகன் தலைமையிலான வைத்தியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
வைத்தியசாலையில் பிரதான நுழைவாயிலில் இருந்து பேரணியாக வருகைதந்து வைத்தியசாலை நிர்வாக பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் “இலங்கை மருத்துவ சேவையை” உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும், அறிவார்ந்த உழைப்புச் சுரண்டப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும், “வைத்தியர்களை நாட்டை விட்டு விரட்டாதே”, தகுதியுள்ள மருத்துவ வல்லுநர்கள் பொருளாதாரக் காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறும் சூழலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் அனைவரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் விசேட வைத்திய நிபுணர் மதன் அழகன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்ததாவது,








