கித்துல்கல பகுதியில் இன்று (11) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த இருவரையும் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்குப் பொலிஸாரும் அப்பகுதி மக்களும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







