சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்ட இலங்கையரான அனோஜன் சிவராசா, தற்போது அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சவூதி அரேபிய நீதிமன்றம் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீக்கி முழுமையான விடுதலை வழங்கியுள்ளது.
இந்நிலையில், அனோஜன் சிவராசாவை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.








